பொது செய்தி

தமிழ்நாடு

இறைச்சியை மூடி கொண்டு போகணும்: உணவு பாதுகாப்புத்துறை

Added : பிப் 14, 2020
Advertisement

கோவை:இறைச்சி கடைக்காரர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து, உணவு பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ் கொடுத்து வருகின்றனர்.கோவை மாவட்டத்தில், இறைச்சி விற்பனை செய்வோர், விற்பனையின்போதும், ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு இறைச்சி கொண்டு செல்லும்போதும், உரிய வரைமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பது, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வில் தெரியவந்தது.இதையடுத்து, இறைச்சி கடைகளில் நேரடி ஆய்வு செய்து, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்க கலெக்டர் உத்தரவிட்டார்.அதன்படி உக்கடம், கரும்புக்கடை, கோட்டைமேடு, மரக்கடை, செல்வபுரம், கணபதி, ரத்தினபுரி, சங்கனுார் ரோடு பகுதிகளில் செயல்படும், 47 இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இறைச்சி விற்பனை செய்வது மற்றும் கொண்டு செல்வது தொடர்பாக நேரடியாக, ஆலோசனை, வழிகாட்டுதலை, கடைக்காரர்களுக்கு ஆய்வாளர்கள் வழங்கினர்.'இறைச்சியை கொண்டு செல்லும்போது, வெளியில் தெரியாத வகையில் மூடி, கொண்டு செல்ல வேண்டும், விற்பனைக்கு பிளாஸ்டிக் பை பயன்படுத்தக்கூடாது' என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்களை கொண்ட நோட்டீஸ் வழங்கப்பட்டது.இறைச்சி கடைக்காரர்கள், உணவு பாதுகாப்புத்துறை வழிகாட்டுதலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மீண்டும் ஆய்வு செய்யும்போது, துறை வழிகாட்டுதலை கடைபிடிக்காத இறைச்சி கடைக்காரர்கள் மீது, உணவு பாதுகாப்பு தரச்சட்டம், 2006ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.- தமிழ்செல்வன்நியமன அலுவலர், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X