பொது செய்தி

தமிழ்நாடு

கோப்புகளை தமிழில் கையாள பயிற்சி: களமிறங்கியது தமிழ் வளர்ச்சித்துறை

Added : பிப் 14, 2020
Advertisement

கோவை:தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பல்துறை அரசு அலுவலர்களுக்கு, இரண்டு நாள் ஆட்சிமொழி கருத்தரங்கு, கோவை ராஜவீதி அரசு துணி வணிகர் பள்ளியில் நேற்று துவங்கியது. துணை இயக்குனர் அன்புச்செழியன்துவக்கி வைத்தார்.நடைமுறையில் உள்ள ஆட்சிமொழி சட்டத்தின்படி, அரசு அலுவலகங்களில் முத்திரை, கடிதம், பிற கோப்புகள் தமிழில் நிர்வகிக்க வேண்டியது அவசியம். இதுசார்ந்து, தொடர் ஆய்வுகள் தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகளால், மேற்கொள்ளப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.அரசு அலுவலகங்களில், தமிழ் முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் என்னென்ன சிரமங்கள் உள்ளனஎன்பதை அறிந்து, தீர்வு காணும் வகையில், ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும், ஆட்சி மொழிக்கருத்தரங்கு நடத்தப்பட்டு, அரசு அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் அன்புச்செழியன் கூறுகையில், ''இரண்டு நாட்களில் நான்கு கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைத்து அரசு துறைகளில் இருந்தும், 140 அலுவலர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு, தமிழில் கோப்புகள் , முத்திரை, கடிதம் எழுதுவது தொடர்பாக விளக்கமளிக்கப்படுகிறது.ஆய்வு சமயங்களில் சுட்டிக்காட்டப்பட்ட பிற குறைபாடுகள், பிழைகள் குறித்தும் தெளிவுபடுத்துவோம். பிற மொழிகளிலிருந்தும், தொழில்நுட்ப ரீதியாகவும் புதிதாக உருவாகும் தமிழ் சொற்கள் பயன்பாடு குறித்தும் கலந்துரையாடப்படும்,'' என்றார்.தொடர்ந்து இக்கருத்தரங்கு, இன்றும் நடைபெறுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X