பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் ரத்தசோகை பாதிப்பு பெண்களுக்கு அதிகம்

Added : பிப் 14, 2020
Advertisement

காரைக்குடி:சிவகங்கை மாவட்டத்தில், கர்ப்பிணிகள் உட்பட அனைத்து வயது பெண்களும் ரத்தசோகை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

களத்துார் ஊராட்சியில், மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் மருத்துவ அலுவலர் வெங்கடேஸ்வரன் பேசியதாவது: பெண்கள் சத்தான உணவுகளை உண்ணாமல் அதிகம் ரத்த சோகை நோயால் பாதிக்கப்படுகின்றனர். மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்குபேறுகால நிதி உதவித்தொகையாக ரூ. 18 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இதற்கு, முதல் 3 மாதங்களுக்குள் பதிந்தால் மட்டுமே உதவித்தொகை கிடைக்கும். ஆனால், பெரும்பாலும், கர்ப்பிணிகள் 3 மாதம் வரைபொருத்திருந்து, கர்ப்பம் தங்குகிறதா என உறுதி செய்து விட்டு 5வது மாதங்களில் தான் பதிவதற்கே வருகின்றனர்.

தவணை முறையில் உதவித்தொகை வழங்கப்படுவது கர்ப்பிணிகள் சத்தான உணவு பொருட்களை வாங்கி உண்ணுவதற்காக தான். ஆனால், பெண்கள் சத்தான உணவு பொருளை உண்ணாமல் பணத்தை சேர்த்து வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X