பொது செய்தி

தமிழ்நாடு

திருப்புத்தூர் ஒன்றியத்தில் குவாரி அனுமதி ரத்து: ஏல தொகை வராததால் மகளிர் குழு அவதி

Added : பிப் 14, 2020
Advertisement

திருப்புத்துார்:திருப்புத்துார் ஒன்றியத்தில் கல்குவாரி எடுத்து நடத்திய மகளிர் குழுவிற்கு ஏல அனுமதி ரத்தாகியும் 10 ஆண்டுகளுக்கு மேலாகஏலத்தொகை திருப்பி கிடைக்காததால் வங்கிக் கடனை செலுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருப்புத்துார் ஒன்றியத்தில் உள்ள திருக்கோளக்குடி மலைக் குன்றுகளில் கற்கள் வெட்டி எடுத்துவிற்க ரோஜா மகளிர் சுயஉதவிக்குழுவினர் 2007ல் சிவகங்கை கனிமவளத்துறையினர் நடத்திய ஏலத்தில் பங்கு பெற்றனர். ஏலத்தொகை ரூ.50ஆயிரம் மற்றும் வைப்புத்தொகை ரூ 10 ஆயிரம் செலுத்தினர்.குழுவை பதிவு செய்வது, நடைமுறைச் செலவு என்று அதற்காகரூ 2 லட்சம் கடனுதவியை வங்கியிலிருந்து பெற்றிருந்தனர்.

இந்நிலையில் அனுமதி பெற்று சுமார் 11ஆயிரம் கற்கள் வரை வெட்டி வியாபாரத்தை துவக்கிய நிலையில்,குன்றில் கிரானைட் இருப்பதாகக் கூறி கனிமவளத்துறையினர் ஏலத்தை ரத்து செய்து விட்டனர். இதனால் கல்வெட்டும் பணியை இழந்த குழுவினர்ஏலத்தொகை மற்றும் வைப்புத்தொகையைக் கோரினர். ஆனால் திருப்பித் தராததால் குழுவினர் இன்னொரு இடத்தை குத்தகைக்கு எடுத்து கடனுக்கு வட்டிகட்டினர்.

ஆனால் தற்போது 13 ஆண்டுகளைக் கடந்தும் ஏலம் பணம் திருப்பி வராத நிலையில் கடன் தொகை கூடிகுழுவினர் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

ரோஜா குழு தலைவர் மல்லிகா கூறுகையில், 'அரசு உத்தரவாதத்தை நம்பி குவாரி ஏலம் எடுத்து தொழில் நடத்த வங்கிக் கடனுதவி பெற்றோம். குவாரியில் கிரானைட் இருப்பதை அறியாமல் எங்களுக்கு குத்தகைக்கு விட்டது எங்கள் தவறல்ல. தற்போது வங்கிக் கடனை செலுத்த முடியாத எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஏலத்தொகையை வங்கிக்கு செலுத்தி கடனை ரத்து செய்துதர வேண்டும்' என்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X