பொது செய்தி

தமிழ்நாடு

கண்மாய் மீன் விலை வீழ்ச்சி: மீன் பிரியர்கள் மகிழ்ச்சி

Added : பிப் 14, 2020
Advertisement
 கண்மாய் மீன் விலை வீழ்ச்சி: மீன் பிரியர்கள் மகிழ்ச்சி

திருப்புவனம்:திருப்புவனத்தில் கண்மாய் மீன் நேற்று விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டதால் மீன் பிரியர்கள் போட்டி போட்டு மீன்களை வாங்கினர்.

கடந்த நவம்பரில் பெய்த மழை காரணமாக திருப்புவனத்தைச் சுற்றியுள்ள கண்மாய்,ஊரணி,வைகை ஆற்றுப்பள்ளங்களில் தண்ணீர் நிரம்பியது. ஜனவரியில் மழை பெய்த பிறகு தொடர்ச்சியாக மழை இன்றி வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததாலும், பாசனத்திற்கு தண்ணீர் எடுத்ததாலும் கண்மாய்களில் தண்ணீர் மட்டம் குறைந்து விட்டது. எனினும் கண்மாய்களில் கெழுத்தி, கெண்டை, அயிரை மீன்களை பிடித்து நகரில் விற்பனை செய்து வருகின்றனர்.

பொதுவாக கண்மாய் கெழுத்தி மீன்கள் கிலோ 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவது வழக்கம். நேற்று வழக்கத்திற்கு மாறாக கிலோ 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.மீன் பிரியர்கள் கூறுகையில், கண்மாய் மீன்கள் ருசியாக இருக்கும். கடந்த நான்கு வருடங்களாக மழை இல்லாததால் கண்மாய் மீன் விற்பனைக்கு வரவில்லை. கடந்தாண்டு பெய்த மழை காரணமாக கண்மாய்களில் குறைந்த அளவு மீன்களையே விவசாயிகள் பிடித்து வந்து விற்பனை செய்கின்றனர்.

கெழுத்தி மீன்களை விட கெண்டை மீன்கள் விலை குறைவு, மணல்மேடு உள்ளிட்ட பகுதி வைகை ஆற்றில் உள்ள பள்ளங்களில் இருந்து பலரும் பிடித்து வந்து விற்பனை செய்வதால் வாங்கி செல்கிறோம், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X