பொது செய்தி

தமிழ்நாடு

சிலம்பம்; பதக்கம் குவித்தது ஆஷ்ரம்!

Added : பிப் 14, 2020
Advertisement

கோவை:ஈச்சனாரி கற்பகம் பல்கலை வளாகத்தில் நடந்த, தேசிய அளவிலான சிலம்பப்போட்டியில், கோவைபுதுார், ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் பதக்கங்கள் வென்றனர்.ஆஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் மற்றும் கற்பகம் பல்கலை சார்பில், 16வது தேசிய அளவிலான, சிலம்பம் போட்டி, பல்கலை வளாகத்தில் நடந்தது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதில், ஒற்றைகம்பு வீச்சு, வேல் கம்பு வீச்சு, வாள் வீச்சு, சுருள்வாள் வீச்சு, ஆயுத கோர்வை, கம்பு சண்டை உள்ளிட்ட, 13 பிரிவுகளில் நடந்த போட்டிகளில் பங்கேற்று இப்பள்ளி மாணவ, மாணவியர் பதக்கங்கள் பெற்றுள்ளனர்.பள்ளி முதல் வகுப்பு மாணவன், பிரகதி உதயேந்திரன், சுருள்வாள் வீச்சு மற்றும் ஆயுத கோர்வையில், தங்கமும், கை கோர்வை மற்றும் குத்து வரிசையில், 2 வெள்ளியும், கம்பு சண்டையில் ஒரு வெண்கலமும் வென்றுள்ளார்.பிளஸ் 1 மாணவன் ஹரீஷ், இரண்டை கம்பு வீச்சு, கம்பு சண்டை, கம்பு ஜோடி பிரிவுகளில் தங்கம் வென்றுள்ளார். பிளஸ் 1 மாணவி, மவுலிகா கை கோர்வை, கம்பு ஜோடி பிரிவுகளில், தங்கமும், கம்பு சண்டை, குத்து வரிசை பிரிவுகளில் வெள்ளியும், சுருள்வாள் வீச்சில், வெண்கலமும் வென்றார்.பத்தாம் வகுப்பு மாணவி, தக் ஷா, இரட்டைகம்பு, கம்பு ஜோடி மற்றும் கை கோர்வை ஜோடியில், தங்கமும், ஆயுத கோர்வை ஜோடியில், வெள்ளியும் வென்றார். ஏழாம் வகுப்பு மாணவி, கரீஷ்மா, கைகோர்வை, இரட்டை கம்பு, கம்பு சண்டையில் வெள்ளியும், கம்பு ஜோடி பிரிவில், வெண்கலமும் வென்றார். மூன்றாம் வகுப்பு மாணவன் கவுதம், குத்து கோர்வையில் வெள்ளியும், கம்பு சண்டை, கைகோர்வையில், வெண்கலமும் வென்றார்.ஒன்பதாம் வகுப்பு மாணவன் சவுந்தர்ராஜன், நெடுகம்பு வீச்சில் தங்கமும், கம்பு சண்டை, குழு ஆயுத வீச்சில் வெள்ளியும் வென்றார். ஆறாம் வகுப்பு மாணவி, விஸ்மயா, கம்பு சண்டை, கைகோர்வை ஜோடியில், வெள்ளியும், ஆயுத கோர்வையில், வெண்கலமும் வென்றுள்ளார்.பதக்கம் பெற்ற மாணவ, மாணவியரை, பள்ளி தாளாளர் தேவேந்திரன், நிர்வாக இயக்குனர் கவுரி உதயேந்திரன், முதல்வர் சரண்யா, பயிற்சியாளர் பவித்ரா பிரியதர்ஷினி, ஆசிரியர்கள் மற்றும் பிற மாணவ, மாணவியர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X