தேசிய சிலம்ப போட்டி சாதித்த எஸ்.பி.கே., மாணவர்கள்

Added : பிப் 14, 2020
Advertisement
 தேசிய   சிலம்ப போட்டி   சாதித்த எஸ்.பி.கே., மாணவர்கள்

அருப்புக்கோட்டை:அகில இந்திய சிலம்பம் பெடரேஷன் சார்பில் கோயமுத்துார் கற்பகள் பல்கலையில் 16 வது தேசிய சிலம்ப போட்டி நடந்தது.

தமிழ்நாடு சார்பில் எஸ்.பி.கே., மேல்நிலை பள்ளி 9 ம் வகுப்பு மாணவர் ராம்நிஷாந்த், ஜூனியர் பிரிவில் மூவர் குழு ஆயுத வீச்சு, குத்து வரிசை, வேல் கம்பு வீச்சு போட்டிகளில் விளையாடி முதல் இடம் பெற்றார். இதே பிரிவில் 11 ம் மாணவன் கேசவன் விளையாடினார். இரு மாணவர்களும் தங்க பதக்கம், கேடயம் பெற்றனர்.

தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர், பள்ளி செயலர் காசிமுருகன், பள்ளி தலைவர் ஜெயகணேசன் ,தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன், உடற் கல்வி இயக்குநர் சவுந்திரபாண்டியன், உடற் கல்வி ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X