பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடியினர் தங்கி செல்லும் மையத்தில் குப்பை குவியல்

Added : பிப் 14, 2020
Advertisement
 பழங்குடியினர் தங்கி செல்லும் மையத்தில் குப்பை குவியல்

பந்தலுார்:பந்தலுாரில் பழங்குடியினர் தங்கி செல்லும் வகையில் கட்டப்பட்ட மையம், குப்பை கொட்டும் பகுதியாக மாறி வருகிறது.பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் வனத்தை ஒட்டி வாழ்ந்து வரும் பழங்குடி இன மக்கள், தங்களின் பல்வேறு தேவைகளுக்காக, பந்தலூர் மற்றும் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். மாலை நேரங்களில் வீடு திரும்ப முடியாத நிலையில், இவர்கள் கடை மற்றும் பஸ் ஸ்டாண்டுகளில் தங்கி செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டது.அதனை அடுத்து கடந்த, 2006--07ம் நிதியாண்டில், மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 5 லட்சம் ரூபாய் செலவில், பழங்குடியினர் தங்கும் மையம் கட்டப்பட்டது. சில வாரங்கள் மட்டும் செயல்பட்ட கட்டடம் பின்னர் மக்கள் தங்கி செல்ல முடியாத நிலைக்கு மாறி உள்ளது.இங்குள்ள ஹோட்டல் மற்றும் லாட்ஜ் உள்ளிட்ட கட்டடங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் அனைத்தும், இந்த கட்டடத்தை சுற்றிலும் நிறைந்து காணப்படுகிறது.மேலும், கடைகளில் இருந்து அகற்றப்படும் குப்பைகளும் இப்போதும் கொட்டி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதன் ஜன்னல் பகுதிகள் உடைக்கப்பட்டு உள்ளதால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் புகலிடமாக மாறியுள்ளது.இதனால், இதனை ஒட்டிய பள்ளி கட்டடங்களிலும் மாணவர்கள் படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கழிப்பிட கழிவுகள்,குடியிருப்பு கழிவுகள் மற்றும் குப்பைகள் நிறைந்து காணப்படும் இந்த கட்டடத்தை சுற்றிலும் பாதுகாப்பு சுவர் அமைத்து, துாய்மை பணியை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X