பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே ஸ்டேஷனில் 'ஷூட்டிங்' ரூ.8.75 லட்சம் வருமானம்

Added : பிப் 14, 2020
Advertisement

ஊட்டி:ஊட்டியில் ரயில்வே ஸ்டேஷனில், நேற்று ஒரு நாள் சினிமா ஷூட்டிங் நடந்ததால், 8.75 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது; சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்தனர்.ஊட்டி மலை ரயில் பாதையில், ரன்னிமேடு, குன்னுார், வெலிங்டன், அருவங்காடு, கேத்தி, லவ்டேல், ஊட்டி வரையில், ரயில்வே ஸ்டேஷன்கள் உள்ளன. இங்கு, கடந்த காலங்களில், 'ஹாலிவுட்', கோலிவுட் உட்பட தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளின் சினிமா ஷூட்டிங் நடந்தது. அதன்பின், கடந்த, ஐந்து ஆண்டுகளாக இந்த ஷூட்டிங் நடக்கவில்லை.இந்நிலையில், ஊட்டி ரயில்வே ஸ்டேஷனில், நேற்று மலையாள ஷூட்டிங் நடந்தது. அதனை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்தனர்.ஸ்டேஷன் மாஸ்டர் பரனிதரன் கூறுகையில், ''ஊட்டி- கேத்தி ரயில் நிலையம்; மலை ரயில் பாதைகளில், மலையாள படப்பிடிப்புக்கான, ஒரு நாள் சினிமா ஷூட்டிங் நடந்து வருகிறது. 12 மணி நேரம் அவகாசம் கேட்கப்பட்டது. இதற்கு கட்டணமாக, 8.75 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது,'' என்றார்மலை ரயில் அறக்கட்டளை நிறுவனர் நடராஜன் கூறுகையில்'' ஊட்டி முதல் மேட்டுப்பாளையம் வரை அனைத்து ரயில் நிலையங்களில் சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கினால், ரயில்வே சுற்றுலா மேம்படுவதுடன், வருமானமும் கிடைக்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X