பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சியில் செயலர் இல்லை: ஸ்ரீவி.,ஒன்றிய கூட்டத்தில் விவாதம்

Added : பிப் 14, 2020
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்:படிக்காசுவைத்தான் பட்டி ஊராட்சியில் செயலர் பணியிடத்தை நிரப்ப ஸ்ரீவி.,ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தினார்.

ஸ்ரீவில்லிபுத்துார் ஒன்றிய கவுன்சில் கூட்டம்தலைவர் ஆறுமுகம் (தி.மு.க.,)தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். வட்டாரவளர்ச்சி ஆணையாளர் சிவகுமார் திருக்குறள் விளக்க உரையாற்றினார்.

கவுன்சிலர்கள் விவாதம்:முத்தையா(அ.தி.மு.க): வார்டுகளில் நிலவும் அடிப்படை பிரச்னைகளை உடனடியாக தீர்க்கவேண்டும். ஆரம்ப சுகாதாரநிலையங்கள், ரோடுகள், கழிவுநீர் வாறுகால்கள் மேம்படுத்தவேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கூட்டரங்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் பழனிச்சாமி படங்கள் வைக்கவேண்டும்.

ஆணையாளர்: விரைவில் படங்கள் வைக்கப்படும்.

கந்தலட்சுமி( தி.மு.க.): படிக்காசுவைத்தான் பட்டி ஊராட்சியில் செயலர் பணியிடம் நிரப்ப படாததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

ஆணையாளர்: ஊராட்சி செயலர் பணியிடம் நிரப்ப ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பால் தேர்வு செய்யவில்லை. விரைவில் நியமிக்கப்படும்.

தலைவர் (தி.மு.க.): ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்கள் பகுதிகளில் செய்யவேண்டிய பணிகள் குறித்து அடுத்த 3 நாட்களுக்குள் கோரிக்கைகளை தாக்கல் செய்யுங்கள். அடுத்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசின் நிதியுதவி பெற்று பணிகளை துவக்குவோம். தொகுதி எம்.எல்.ஏ.,மூலம் கூடுதல் நிதி ஒதுக்க கோருவோம்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X