தமிழ்நாடு

இதை தவிர்க்கலாமே ரோட்டோரத்தில் கொட்டி எரிக்கப்படும் குப்பை சுற்றுச்சூழல் பாதிப்போடு தொற்றுநோய் அபாயம்

Added : பிப் 14, 2020
Advertisement

சிவகாசி:ரோட்டோரத்தில் கொட்டி எரிக்கப்படும் குப்பையால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதோடு தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

மாவட்டத்தில் நகர் மற்றும் கிராம பகுதிகளில் தினந்தோறும் அதிகப்படியான குப்பை சேர்கின்றன. கிராம பகுதிகளை விட நகர் பகுதிகளில் குடியிருப்புகள், கடைகள், தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. இவைகளின் மூலம் கிடைக்கும் குப்பையை சேகரிக்க ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைத்திருக்க வேண்டும்.

ஆனால் பெரும்பான்மையான குடியிருப்பு பகுதி தொழிற்சாலைகள், கடைகள் உள்ள பகுதிகளில் குப்பை தொட்டிகள் வைத்திருப்பதில்லை. இதனால் கழிவுகள் ரோட்டில் ஆங்காங்கே வீசப்படுகின்றன. தொட்டிகள் வைத்திருந்தாலும் அதை முறையாகப் பயன்படுத்தாமல் மக்கள் அலட்சியப் போக்கினை கடை பிடிக்கின்றனர். கொட்டப்படும் குப்பையை நகராட்சி நிர்வாகம் முறையாக சேகரித்து நகரின் வெளிப்பகுதியில்தான் கொட்டி அழிக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு செய்வதில்லை. எங்கு குப்பை அதிகளவில் சேர்கிறதோ அங்கேயே வைத்து எரித்து விடுகின்றனர். பாலிதீன் கவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் அவைகள் தாராளமாக புழக்கத்தில் உள்ளன. இவைகளை ரோட்டின் அருகே எரிக்கும் போதுஏற்படும் புகையால் கண் எரிச்சல் ஏற்படுகிறது. அதிகளவில் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. குழந்தைகள், பெரியவர்கள் தொற்றுநோய்க்கு ஆளாகின்றனர். புகை ரோட்டில் பரவி பாதையை மறைத்து விடுகிறது.

சிவகாசி சாட்சியாபுரம், நாராணாபுரம் ரோடு, முருகன் காலனி, விளாம்பட்டி ரோடு , திருத்தங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குப்பையை ரோட்டோரத்தில் கொட்டிஅங்கேயே எரிக்கின்றனர். அதிகப்படியான வாகனங்களால் நகர் பகுதிகளில் சுத்தமான காற்றுக்கு வழியே இல்லை. இந்நிலையில் குப்பையை நகருக்குள்ளே எரிப்பதால் காற்று முற்றிலும் மாசு அடைகிறது. போக்குவரத்து நிறைந்த ரோட்டில் தீ வைப்பதால் விபத்தும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தீயின் வெப்பத்தால் டூ வீலர், சைக்கிள் மற்றும் நடந்து செல்பவர்கள் சிரமப்படுகின்றனர்.

காற்று மாசுபடுகிறது

குப்பையை நகருக்குள் ரோட்டில் வைத்து எரிப்பதால் காற்று முற்றிலும் மாசுபடுகிறது. இதை சுவாசிக்கையில் பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்படுகிறது. குப்பையை முறையாக சேகரித்து நகருக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும். குப்பை ஏற்றும் வாகனத்தில் கொண்டு சென்று சில இடங்களில் நகருக்குள்ளே கொட்டி எரித்து விடுகின்றனர். குடியிருப்பு பகுதியும் அருகில் இருப்பதால் பொதுமக்கள் பெரும் பாதிப்படைகின்றனர். வாகனங்கள் செல்லும்போது விபத்தும் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
சுதாகர், தனியார் ஊழியர், திருத்தங்கல்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X