பொது செய்தி

தமிழ்நாடு

நீர் திருட்டுக்கு 'செக்!' பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசன வாய்க்கால்களில்...அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைப்பு

Added : பிப் 14, 2020
Advertisement
 நீர் திருட்டுக்கு 'செக்!'  பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசன வாய்க்கால்களில்...அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைப்பு

உடுமலை:பி.ஏ.பி., மண்டல பாசன வாய்க்காலில், தண்ணீர் திருட்டை தடுக்கும் வகையில், அரசு அதிகாரிகளை கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, விரைவில், ரோந்து பணிகள் துவங்க உள்ளது.
பி.ஏ.பி., முதலாம் மண்டலத்திலுள்ள, 94,521 ஏக்கர் நிலங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, கடந்த, ஜன.,27 முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. சுற்றுக்கு, 1,900 கன அடி வீதம், நான்கு சுற்றுக்கள் தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக மழைப்பொழிவு இல்லாமல், கடும் வறட்சி நிலையில், பாசனம் துவங்கியுள்ளதால், பிரதான கால்வாய் மற்றும் பகிர்மான கால்வாய்களில், நேரடியாக குழாய் அமைத்தும், கரைகளில் துளையிட்டும், பாசன நீர் திருட்டு அபரிமிதமாக நடந்து வருகிறது.
இதனால், கால்வாய்களில் திறக்கப்படும் நீரில் பெருமளவு மாயமாவதோடு, நீர் இழப்பும் அதிகரிப்பதால், திட்டத்தின் கீழ் பயன்பெறும் நிலங்களுக்கு போதிய நீர் கிடைக்காததோடு, கடை மடை பாசன நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல், சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் காய்ந்து வருகின்றன.
இது குறித்து தொடர்ந்து பி.ஏ.பி.,விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.இதனையடுத்து, சட்ட விரோத தண்ணீர் திருட்டை தடுக்கும் வகையில், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மின் வாரியம், போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகளை கொண்ட கண்காணிப்பு குழுவை, வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் நியமித்துள்ளார்.உடுமலை கால்வாய், கி.மீ.,0 முதல் 23/170 வது கி.மீ., வரை, போடிபட்டி, ஜல்லிபட்டி, குறிச்சிக்கோட்டை, ஆலாம்பாளையம், ஆண்டியகவுண்டனுார், எலையமுத்துார், மானுப்பட்டி, பாப்பான்குளம், குரல்குட்டை, கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனுார் பகுதிகளுக்கு, அணி எண் 1 நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், உடுமலை தாசில்தார் தயானந்தன், சிவில் சப்ளை தாசில்தார் விவேகானந்தன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜெயகுமார், பாசன ஆய்வாளர் முருகேசன், பஞ்சலிங்கம், பாலகிருஷ்ணன், அமராவதி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., சரவணன், வனவர் முருகானந்தம், உடுமலை மேற்கு மின் வாரிய உதவி செயற்பொறியாளர் மோகன்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உடுமலை கால்வாய், சரகம், எல்.எஸ்.,23/170 முதல் 38/120 வரை, தாந்தோணி, பெரியகோட்டை, மைவாடி, கோட்டமங்கலம், பொன்னேரி, மெட்ராத்தி, துங்காவி, குடிமங்கலம் பகுதிகளுக்கு, தாசில்தார்கள், தயானந்தன், விவேகானந்தன், பி.ஏ.பி.,உதவி பொறியாளர் பிரசாத், உதவியாளர்கள் குப்புச்சாமி, விஸ்வ நாதன், குடிமங்கலம் போலீஸ் எஸ்.ஐ.,ருக்மணி, வனவர் சுப்பையா, மின்வாரிய உதவி பொறியாளர் உமாமகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளனர்.
அணி எண்,3, உடு மலை கால்வாய், 0/0 முதல் 22/150 கி.மீ., வரை, பெரியவாளவாடி, ஆர்.வேலுார், பூலாங் கிணர், அந்தியூர், கண பதிபாளையம், புக்குளம், வெனசுபட்டி, முக்கூடு ஜல்லிபட்டி, கோட்டமங்கலம், வளையபாளையம், கொட்டம்பட்டி பகுதிகளுக்கு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜலஜா, பி.ஏ.பி., உதவி பொறியாளர் செந்தில்குமார், உதவியாளர் ரத்தினசாமி, சவுந்தரராஜன், பாலசுப்ரமணி, வீரமுத்து, தளி போலீஸ் எஸ்.ஐ.,சிவராஜ், வனவர் தங்கபிரகாஷ், மின்வாரிய உதவி பொறியாளர் கணேசன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிரடிக்கு அதிகாரம்!
கண்காணிப்பு குழுவிலுள்ள அலுவலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கால்வாய்களில், தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவேண்டும். பாசன நீரை, குழாய் அமைத்தும், கரைகளில் துளையிட்டும், நேரடியாகவும், மறைமுகமாகவும் தண்ணீர் திருட்டில் ஈடுபட்டால், சம்மந்தப்பட்ட பொருட்கள், மோட்டார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யவேண்டும். குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது, போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு பதிவு செய்யவும், சம்மந்தப்பட்ட நபர்களின் விவசாய மின் இணைப்பை துண்டிக்கவும், பாதை வரி அனுமதி பெற்றிருந்தால் அதனையும் ரத்து செய்யவும் வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X