பொது செய்தி

தமிழ்நாடு

5 நிமிடம் 39 வினாடியில் 200 திருக்குறள் உலக சாதனை படைத்த அரசு பள்ளி மாணவி

Added : பிப் 14, 2020
Advertisement
 5 நிமிடம் 39 வினாடியில் 200 திருக்குறள்   உலக சாதனை படைத்த அரசு பள்ளி மாணவி

சிவகாசி:சிவகாசி அருகே கே.மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாணவி 200 திருக்குறள்களை5 நிமிடம் 39 வினாடிகளில் கூறி உலக சாதனை படைத்தார்.

இப்பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும் 6 வயது மாணவி கிருத்திகா ஹரிணி. பாடங்களை எளிதாக மனனம் செய்வதை கண்ட இவரது பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் திருக்குறள்களை கூறி உலக சாதனை படைக்க மாணவிக்கு பயிற்சியளித்தனர். அதன்படி பயிற்சி பெற்ற மாணவி 200 திருக்குறள்களை 6 நிமிடத்தில் கூறினார்.

இதைதொடர்ந்து சிவகாசி லயன்ஸ் கிளப் உலக சாதனையில் இடம் பெற முயற்சி செய்தனர். அதன் படி சிவகாசி லயன்ஸ் பள்ளியில் மாணவி கிருத்திகா ஹரிணியின் உலக சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ட்ரம்ப்த் வேர்ல்டு நிறுவனத்தை சேர்ந்த முக்தா நடுநிலையாளராக பங்கேற்றார்.

சிவகாசி டி.எஸ்.பி., பிரபாகரன், தொழிலதிபர்கள் செல்வராசன், அசோகன், லயன்ஸ் கிளப் வாசியப்பன் , ராஜகோபால், வினோத்கண்ணா முன்னிலையில் மாணவி திருக்குறள்களை கூற துவங்கினார். பள்ளி தலைமையாசிரியர் யசோதா தேவி, ஆசிரியர்கள் ஜெயமேரி, பத்மாவதி, விஜயராணி கலந்து கொண்டனர்.மாணவி 200 திருக்குறள்களை 5 நிமிடம் 39 வினாடிகளில்கூறி அசத்தினார்.

ட்ரம்பத் உலக சாதனை நிறுவனம் சார்பில் உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கு முன் திருவண்ணமலை 3 ம் வகுப்பு மாணவி 4.42 நிமிடங்களில் 150 திருக்குறள்கள் கூறியதே உலக சாதனையாக இருந்தது. இதை கே.மடத்துப்பட்டி அரசு பள்ளி மாணவி முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X