பொது செய்தி

தமிழ்நாடு

விண்வெளி அறிய அறிவியல் கண்காட்சி

Added : பிப் 14, 2020
Advertisement
 விண்வெளி அறிய அறிவியல் கண்காட்சி

உடுமலை:உடுமலை வி.ஏ.வி., இன்டர்நேஷனல் பள்ளி யில், பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வுக்காக, 'இஸ்ரோ' விண்வெளி கண்காட்சி நடந்தது.
உடுமலை, வி.ஏ.வி., இன்டர்நேஷனல் பள்ளி மற்றும் 'இஸ்ரோ' சதீஸ் தவான் விண்வெளி மையம் சார்பில், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, மூன்று நாள் அறிவியல் கண்காட்சி பள்ளியில் நடக்கிறது.கண்காட்சி, துவக்க விழா நேற்று நடந்தது. உடுமலை, கோட்டாட்சியர் ரவிக்குமார் துவக்கி வைத்தார். குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி.,பள்ளி தாளாளர் ஜூலியா தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் வரதராஜன் வரவேற்றார். தாளாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார்.கண்காட்சியில், இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள் மாதிரிகளை காட்சிப்படுத்தி மாணவர்களுக்கு விளக்கமளித்தனர். மாணவர்கள், விண்வெளியில் நடக்கும் செயல்பாடுகள் குறித்த மாதிரிகளை காட்சிப்படுத்தினர். பெற்றோர், பொதுமக்கள் கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம்.
கண்காட்சி, இன்றும், நாளையும்,காலை, 9:30 மணி முதல், மாலை 4:30 மணி வரை நடக்கிறது. கண்காட்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, விண்வெளி தொடர்பான ஓவியப்போட்டி, அறிவியல் வினாடி வினாப்போட்டிகளும் நடத்தப்படுகிறது.கண்காட்சியை பார்க்க விரும்பும் அரசுப்பள்ளிகளுக்கு, வி.ஏ.வி., பள்ளி நிர்வாகம் சார்பில் வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X