பணி முழுமை பெறாத தொட்டி

Added : பிப் 14, 2020
Advertisement

பணி முழுமை பெறாத தொட்டி

நரிக்குடி அருகே என்.முக்குளத்தில் பணி முழுமையடையாமல் பாதியில் நிறுத்தப்பட்டு
குளியல் தொட்டி பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குகொண்டு வர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

-ராஜ்,என்.முக்குளம்.


அச்சுறுத்தும் அங்கன்வாடி மையம்

இருக்கன்குடி அருகே நத்தத்துப்பட்டி அங்கன்வாடி மையம் பழுதடைந்து ஆங்காங்கே விரிசல் விட்டு காணப்படுகிறது. குழந்தைகள் சென்று வருவதால் விபத்து நிகழாமல் இருக்க இதை அகற்றி புதிய அக்கன்வாடி மைய கட்டடம் கட்டட வேண்டும் இல்லையென்றால் மேற்பூச்சுக்கள் செய்யவேண்டும்.

- கோபால்,நத்தத்துப்பட்டி.



உயரமான மேன்ஹோல்

விருதுநகர் மதுரை மெயின் ரோடு போலீஸ் செக் போஸ்ட் அருகே உள்ள மேன்ஹோல் உயரம் அதிகமாக இப்பதால் விருதுநகர்- சிவகாசி செல்லும் வாகனங்கள் இதை கவனிக்காமல் அதில் ஏறி விபத்துக்குள்ளாகிறது. இதன் உயரத்தை குறைத்து ரோட்டோடு ரோடாக அமைத்தால் விபத்து ஏற்படுவதை தவிர்க்கலாம்.

- -விஜி,விருதுநகர்.



சேதமடைந்த இருக்கைகள்

விருதுநகர் பழை பஸ் ஸ்டாண்டில் பயணிகள் இருக்கைகள் சேதமடைந்துள்ளது. பயணிகள் கால் கடுக்க நிற்கும் பரிதாப நிலையே ஏற்படுகிறது.இங்குள்ள இருக்கைகளை முறையாக பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்,விருதுநகர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X