பொது செய்தி

இந்தியா

பிரதமர், அமைச்சர்கள் பற்றி விமர்சனம்: ராஜ்யசபா பாதுகாப்பு அதிகாரி பதவியிறக்கம்

Added : பிப் 14, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
RajyaSabha, Official, SocialMedia, PMModi, பிரதமர், அமைச்சர்கள், விமர்சனம், ராஜ்யசபா, பாதுகாப்புஅதிகாரி, பதவியிறக்கம்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : சமூக வலைதளங்களில், பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் பற்றி தரக்குறைவான விமர்சனங்களை பதிவிட்ட, ராஜ்யசபா பாதுகாப்பு அதிகாரி, பதவியிறக்கம் செய்யப்பட்டார்.

ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் தலைமையில், பார்லிமென்ட் பாதுகாப்பு சேவை பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில், துணை இயக்குனராக பணியாற்றிவர், உருஜுல் ஹசன். இவர், ராஜ்ய சபாவுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.இவர், சமூக வலைதளங்களில், பிரதமர், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் குறித்து, தரகுறைவான விமர்சனங்களை பதிவிட்டு வந்துள்ளார். இதையடுத்து, 2018, ஜூனில் அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அவர் மீது துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.விசாரணை அறிக்கை, ராஜ்ய சபா தலைவர் வெங்கையா நாயுடுவிடம் தாக்கல் செய்யப்பட்டது.


latest tamil news


அந்த அறிக்கையில், 'அரசு ஊழியர்கள், அரசியல் கட்சிகளிலோ, அரசியல் சார்புள்ள இயக்கங்களிலோ பங்கேற்க கூடாது. அரசுக்கு எதிராக கருத்துக்களையும் தெரிவிக்க கூடாது. ஆனால், இதை மீறி, உருஜுல் ஹசல், பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர்களை விமர்சித்து, சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார். அதனால், அவரை பதவியிறக்கம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது' என, கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, உருஜுல் ஹசன், பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார். 'ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், அவர் இப்போது இருந்த பதவியை பெற முடியாது' என, ராஜ்ய சபா இயக்குனர். கே. சுதாகரன் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
14-பிப்-202019:53:44 IST Report Abuse
a natanasabapathy He should have been dismissed from service
Rate this:
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
14-பிப்-202019:00:12 IST Report Abuse
Pasupathi Subbian மேலும் இதுபோன்ற பல பல புல்லுருவிகள் காங்கிரஸ் காலத்தில் பற்பல அரசு பதவியில் ஊடுருவி உள்ளனர்..
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
14-பிப்-202017:49:55 IST Report Abuse
Thiagarajan Kodandaraman உடனடியாக தூக்கி அடிக்காமல் பதவி இறக்கம் என்று சொதப்பி உள்ளார். இதனால் அவர் செய்யும் சேட்டை குறையுமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X