பொது செய்தி

தமிழ்நாடு

108 ஆம்புலன்ஸில் காலி பணியிடம்: வரும் 17ல் நேரில் பங்கேற்க அழைப்பு

Added : பிப் 14, 2020
Advertisement

ஈரோடு: 108 ஆம்புலன்ஸில், டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல், ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகம், டி.பி., ஹாலில் வரும், 17ல் நடக்கிறது. இதில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது. மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு, 19 முதல், 30 வயதுக்கு உட்பட்ட, பி.எஸ்.சி., டி.ஜி.என்.எம்., நர்சிங் மற்றும் அனைத்து பி.எஸ்.சி., பட்டம் பெற்றவர்கள், பிளஸ் 2 தேர்ச்சிக்குப்பின் இரண்டு ஆண்டு படித்தவர்கள் பங்கேற்கலாம். டிரைவர் பணியிடத்துக்கு, 24 முதல், 35 வயதுக்கு உட்பட்ட எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்ற, இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று மூன்றாண்டு நிறைவு பெற்று, பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து ஓராண்டு நிறைவு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்கள், ஓட்டுனர் உரிமம், கல்வி தகுதி சான்றுடன், வரும், 17ல் காலை, 9:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை நேரில் பங்கேற்கலாம். கூடுதல் விபரத்துக்கு, 73973-30787, 73388-94971 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X