பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு

Added : பிப் 14, 2020
Advertisement

குப்பைக்கு தீ வைப்பு; புகையால் அவதி: அந்தியூர் யூனியனுக்கு உட்பட்ட, கெட்டிசமுத்திரம் பஞ்., பகுதியான கிருஷ்ணாபுரம், ஜே.ஜே. நகர் பகுதியில், பர்கூர் சாலையில் குடியிருப்புகள் உள்ளன. மக்கள் பயன்படுத்தும் குப்பையை, துப்புரவு பணியாளர்கள் சாலையோரத்தில் கொட்டி, தீ வைத்து விடுகின்றனர். இதனால், குப்பை தீயில் எரியும் போது, புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. இதனால் ஓட்டுனர்கள் அவதிப்படுகின்றனர்.
தூர்வாராததால் சாக்கடை நாற்றம்: மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட, ஆலாங்காட்டுவலசு பகுதியில் சேகரமாகும் கழிவுநீர் சேறும் சகதியுமாக, அங்குள்ள திறந்தவெளி சாக்கடையில் அடைத்துள்ளது. தவிர, துர்நாற்றம் அதிகரித்துள்ளது. கொசு தொல்லைக்கும் மக்கள் ஆளாகின்றனர். பேரூராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. சாக்கடையை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

குழாய் உடைப்பு; சகதி தேக்கம்: ஈரோடு, கே.கே.நகர் பாலம் பகுதியில், ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டப்பணி நடக்கிறது. அங்கு குழாய் பதிக்கும் பணிக்காக, தோண்டிய இடங்களில், வீடு, கட்டடங்களுக்கு செல்லும் குடிநீர் குழாயை உடைத்து, வீதிகளில் தண்ணீர் ஓடி, சகதியாக தேங்குகிறது. அப்பகுதியில் பல இடங்களில் இதே நிலை தொடர்கிறது. எனவே, குடிநீர் குழாய் உடைந்தால், உடனடியாக அதை அடைக்கவும், மாற்று குழாய் இணைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதரான பாதை; பயனற்ற கழிவறை: ஈரோடு, தாலுகா அலுவலக வளாகத்தில், எஸ்.பி., அலுவலகம், தாலுகா அலுவலகம், சிறைச்சாலை என, பத்துக்கும் மேற்பட்ட அலுவலகங்கள், சங்கங்கள் உள்ளன. அங்குள்ள கழிப்பறைக்கு செல்ல முடியாதபடி, புதர் மண்டி கிடப்பதுடன், கதவையும் பூட்டி வைத்துள்ளனர். இதனால், பொது இடத்தை கழிப்பிடமாக பயன்படுத்துவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதே நிலையில்தான், அங்குள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிடமும் உள்ளது.

பூங்காவில் குப்பை; தூய்மை தேவை: ஈரோடு வ.உ.சி., பூங்கா வளாகத்தில், மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பூங்காவுக்குள் நுழைய அனுமதி இல்லை. இருப்பினும், பூங்காவை சுற்றி உள்ள கோவில், குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம், மாநகராட்சி அலுவலக குப்பையை உள்ளேயே கொட்டி வைக்கின்றனர். அவற்றை அள்ளி செல்லாததால், பூங்கா வளாகத்தில் பல இடங்களில் மோசமாக காணப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X