ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் விரைவில் ஜி.ஹெச்., சந்திப்பில் ரவுண்டானா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் விரைவில் ஜி.ஹெச்., சந்திப்பில் ரவுண்டானா

Added : பிப் 14, 2020
Share

ஈரோடு: 'ஈரோடு ஜி.ஹெச்., சந்திப்பில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், புது ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது' என்று, எஸ்.பி., கூறினார்.
மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கட்டப்பட்ட மேம்பாலம், 2018ல் திறக்கப்பட்டது. இதனால், 50 சதவீத போக்குவரத்து நெரிசல் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும், ஈரோடு அரசு மருத்துவமனை (ஜி.ஹெச்.,) சந்திப்பில், ஐந்து சாலைகள் இணையும் பகுதியில், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் ஜி.ஹெச்., சந்திப்பில் தற்காலிக ரவுண்டானா அமைத்து, போக்குவரத்து போலீசார், ஆயுதப்படை போலீசார், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர். தற்காலிக ரவுண்டானாவுக்கு நிரந்தர தீர்வாக, புது ரவுண்டானா அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரவுண்டானா மாதிரி திட்ட வரைபடத்தை, அனுப்ப மக்களுக்கு அழைப்பு விடப்பட்டது. மக்கள் சார்பில், 82 திட்ட வரைபடங்கள், எஸ்.பி., சக்தி கணேசனிடம் வழங்கப்பட்டது. அவற்றை கலெக்டர் கதிரவன், மாநகராட்சி கமிஷனர் இளங்கோவனிடம், எஸ்.பி., வழங்கினார். இதில் உதவும் கரங்கள் கொண்ட, அடையாள சின்னத்துடன் கூடிய, ரவுண்டானா மாதிரி வரைபடம் தேர்வு செய்யப்பட்டது.


இதுகுறித்து எஸ்.பி., சக்தி கணேசன் கூறியதாவது: புதிதாக அமையவுள்ள ரவுண்டானாவில், விளம்பரங்கள் இல்லாமல், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, போக்குவரத்து விதிமுறை மட்டும் இருக்கும். மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரவுண்டானா அமையவுள்ளது. திட்ட மதிப்பீடு பெறப்பட்டு, நிதி ஒதுக்கீடு பெற்றபின் ரவுண்டானா பணி துவங்கப்படும். ரவுண்டானா மாதிரி வரைபடத்தை தந்தவருக்கு, பணி தொடங்க பூஜை நடக்கும் நாளில், உரிய கவுரவம் செய்யப்படும். இவ்வாறு எஸ்.பி., கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X