பொது செய்தி

தமிழ்நாடு

சட்ட விரோத டாஸ்மாக் பார் நடத்தும் ஆசாமி ஆய்வுக்கு வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதம்: ஊழியர்கள் கண்டனம்; கடையை அடைத்து போராட்டம்

Added : பிப் 14, 2020
Advertisement

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி பகுதியில், சட்டவிரோத பார் நடத்தியவரை கண்டித்து, டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புன்செய்புளியம்பட்டியில், ஆறு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் செயல்படும் பார், உரிய அனுமதியுடன் நடக்கிறதா? என கண்காணிக்க, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட அதிகாரிகள், நேற்று மாலை வந்தனர். பவானிசாகர் சாலையில் பொன்னம்பாளையம் அருகே, பாரை ஆய்வு செய்தபோது, உரிமத்தை புதுப்பிக்காமல் செயல்பட்டது தெரிய வந்தது. இதனால் பாருக்கு சீல் வைக்க முயற்சித்தனர். அப்போது, பார் நடத்தி வந்தவர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ் பாதுகாப்புடன், வாரச்சந்தை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு, ஆய்வுக்கு சென்றனர். அங்கும் வந்த சட்ட விரோதமாக பார் நடத்தும் நபர்கள், மீண்டும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து சட்டவிரோதமாக பார் நடத்துவோரை கண்டித்து, புன்செய்புளியம்பட்டியில் உள்ள ஆறு கடைகளையும், 5:00 மணிக்கு பூட்டி, டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி பார் நடத்தும் ஜெயபிரகாஷ், செந்தில் மீது, நடவடிக்கை கோரி, டாஸ்மாக் ஊழியர்கள், போலீசில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து இரவு, 7:00 மணியளவில் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகளை பூட்டியதால், பரபரப்பு ஏற்பட்டது.

எல்லாமே கண் துடைப்பு? 'புன்செய்புளியம்பட்டி பகுதியில், டாஸ்மாக் கடைகளில், பார் இல்லாத இடங்களில், அதிகாரம் பெற்ற கட்சியை சேர்ந்த பினாமிகள், தைரியமாக சடடவிரோத பார் நடத்துகின்றனர். இதனால், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு, கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது. இது தெரிந்தும், டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல் நேற்றைய நடவடிக்கையும், கண்துடைப்பாக இருக்கவே வாய்ப்புள்ளது. சாமான்யர் ஒருவர், சட்டவிரோதமாக பார் நடத்தி எதிர்ப்பும் தெரிவித்தால், மூன்று மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள், அமைதியாக செல்வார்களா? பவானிசாகரின் முக்கிய வி.ஐ.பி., ஒருவரின் பின்னணியே இதற்கு காரணம். அரசுக்கு இழப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டிய அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க ஆய்வுக்கு வந்த பிறகும், எதுவும் செய்யாமல் நடையை கட்டியதிலேயே, லட்சணம் தெரிகிறது. அதிகாரிகளின் இந்த கூத்தால், இரண்டு மணி நேரம் டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டதை தவிர, வேறொன்றும் நிகழவில்லை' என்று, அப்பகுதிவாசிகள் வேதனை தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X