பெண் தற்கொலை முயற்சி: தடுத்து நிறுத்திய போலீசார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் தற்கொலை முயற்சி: தடுத்து நிறுத்திய போலீசார்

Added : பிப் 14, 2020
Share

ஈரோடு: காவிரி ஆற்றில் குதித்து, தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, போலீசார் தடுத்து நிறுத்தினர். ஈரோடு, கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி அருகே, காவிரி ஆற்றில் குதித்து, ஒரு பெண், நேற்று மாலை தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றார். தகவலறிந்த கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி போலீசார், அவரை தடுத்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். விசாரணையில், ஈரோடு, சடையம்பாளையம் சாலை, பழனிச்சாமி மனைவி தனலட்சுமி, 60; என்பது தெரிந்தது. வீட்டில் இருப்பவர்கள் திட்டியதால், தற்கொலைக்கு முயன்றதாக அவர் தெரிவித்தார். அவரின் மகன், பைனான்ஸ் கம்பெனி அதிபர் என்றும் கூறினார். இதையடுத்து மகனை ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர். மனைவியுடன் வந்த அவருக்கு மட்டுமின்றி, தனலட்சுமிக்கும் அறிவுரை வழங்கி, அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X