சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அம்மாபேட்டை அருகே சோகம்: வாலிபர் விபத்தில் பலி

Added : பிப் 14, 2020
Advertisement

அம்மாபேட்டை: அம்மாபேட்டை அருகே, லாரி மீது டூவீலர் மோதிய கோர விபத்தில், வாலிபர் பலியானார். பாலிடெக்னிக் மாணவர் பலத்த காயமடைந்தார். அம்மாபேட்டை அருகேயுள்ள முகாசிப்புதூரை சேர்ந்தவர் மணிகண்டன், 20; சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள, பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்தார். அதே பகுதியை சேர்ந்தவர் பூவரசன், 20; இவரும் அதே பாலிடெக்னிக்கில் தற்போது படிக்கிறார். நேற்று கல்லூரி முடிந்து, ஜே-இசட் பைக்கில், அம்மாபேட்டைக்கு மணிகண்டனுடன் புறப்பட்டார். மாலை, 6:15 மணியளவில், சின்னப்பள்ளம் என்ற இடத்தில் சென்றனர். அரசு பஸ்சை முந்த முயன்றபோது, எதிரே வந்த லாரி மீது, எதிர்பாராதவிதமாக பைக் மோதியது. இதில் பைக்கை ஓட்டிவந்த மணிகண்டன், தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்தில் பலியானார். இடுப்பு, தலையில் பலத்த காயமடைந்த பூவரசன், உயிருக்கு போராடினார். அப்பகுதி மக்கள் மீட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பினர். விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X