சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரங்களை கடத்தி வந்த 11 லாரிகள் பறிமுதல்

Added : பிப் 14, 2020
Advertisement

ஈரோடு: மரங்களை கடத்தி வந்த, 11 லாரிகளை, ஈரோட்டில் வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஈரோடு தாசில்தார் ரவிச்சந்திரன், தலைமையிலான வருவாய் துறையினர், ஈரோட்டில், சென்னிமலை, கரூர் சாலைகளில் நேற்று அதிகாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விறகுகள் ஏற்றிக்கொண்டு வந்த, 11 லாரிகளை நிறுத்தி விசாரித்தனர். மரங்களை வெட்டுவதற்கான அனுமதி சான்று, கொண்டு வருவதற்கான சான்று இல்லாததால், லாரிகளை பறிமுதல் செய்து, ஈரோடு ஆர்.டி.ஓ., முருகேசனிடம் ஒப்படைத்தனர். அவர் விசாரணைக்குப் பிறகு, லாரிகளுக்கு உரிய அபராதம் விதிக்கப்படும் என்று, வருவாய் துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஈரோடு மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து, சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டு, ஈரோட்டில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளுக்கு, லாரிகளில் நாள்தோறும் கொண்டு வரப்படுகிறது. மாமூல் பிரச்னையில் ஏற்பட்ட மோதலால், உயர் அதிகாரிகள் வரை, யாரோ போட்டுக் கொடுத்ததால், திடீர் சோதனை, லாரிகள் பறிமுதல் என்ற நாடகம் அரங்கேறியுள்ளது. வழக்கம்போல் பறிமுதல், அபராதத்துடன் முடித்துக் கொள்ளாமல், உயரதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X