சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாஜி எம்.எல்.ஏ., தம்பி தோட்டத்தில் நள்ளிரவில் சந்தனமரம் வெட்டி கடத்தல்

Added : பிப் 14, 2020
Advertisement

மொடக்குறிச்சி: அவல்பூந்துறை அருகே, முன்னாள் எம்.எல்.ஏ., தம்பி தோட்டத்தில், சந்தன மரத்தை வெட்டி கடத்திய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவல்பூந்துறை அருகேயுள்ள ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் யுவராஜா, 56; விவசாயியான இவர், மொடக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ., கிட்டுசாமியின் தம்பி ஆவார். தோட்டத்தில் சந்தன மரம் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் வந்த கும்பல், வீட்டில் கட்டியிருந்த நாய்க்கு, மயக்க மருந்து கொடுத்துவிட்டு, 15 ஆண்டுகளான, 40 அடி உயர சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்றனர். நேற்று அதிகாலை தோட்டத்துக்கு சென்ற யுவராஜா, சந்தன மரம் வெட்டி கடத்தியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அடிப்பாகத்தை மட்டும் கடத்திய கும்பல், மீதி துண்டுகளை அதே இடத்தில் எறிந்து விட்டனர். வீட்டருகில் வசிக்கும் தெய்வசிகாமணி என்பவரின் டூவீலரில், பெட்ரோல் திருடிச் சென்றுள்ளனர். புகாரின்படி அரச்சலூர் போலீசார் விசாரிக்கின்றனர். வெட்டி கடத்தப்பட்ட சந்தன மரத்தின் மதிப்பு, இரண்டு லட்சம் ரூபாய் இருக்கும் எனத் தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X