புகார் பெட்டி - சேலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - சேலம்

Added : பிப் 14, 2020
Share

கொசுத்தொல்லையால் தூக்கமில்லை: சங்ககிரி, ஐவேலி ஊராட்சி, அக்கமாபேட்டை, அருந்ததியர் காலனியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். இங்கு, சாக்கடை தூர்வாரப்படாததால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாவதால், இரவில், நிம்மதியாக தூங்க முடிவதில்லை. குறிப்பாக, குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். அதனால், சாக்கடையை தூர்வாரி, கொசு மருந்து அடிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஆர்.குமார், அக்கமாபேட்டை.

அதிவேக டிப்பர் லாரிகளால் விபத்து: சேலம் - பனமரத்துப்பட்டி சாலையில், கந்தபிள்ளையார் கோவில் முதல், சாலை இறக்கமாக உள்ளது. அப்பகுதியில், டிப்பர் லாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும்படி, அதிவேகம், அதிக சத்தத்துடன் செல்கின்றன. அத்துடன், மற்ற வாகனங்களை முந்திச்செல்வதில், போட்டி ஏற்படுகிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். லாரிகளின் வேகத்தை கட்டுப்படுத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பி.ஜி.தங்கவேல், பனமரத்துப்பட்டி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X