2,500 பேருக்கு அன்னதானம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2,500 பேருக்கு அன்னதானம்

Added : பிப் 14, 2020
Share

ஆத்தூர்: ஆத்தூர், கோட்டை பகுதியிலுள்ள, அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளை சார்பில், கடந்த, 8ல், தைப்பூச விழா கொண்டாடப்பட்டது. அதைத்தொடர்ந்து, தினமும் ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று, அறக்கட்டளை தலைவர் டாக்டர் ரத்தினகுமார், செயலர் வெற்றிவேல், பொருளாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர், ஆத்தூர் புது பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை, காமராஜர் சாலை, ராணிப்பேட்டை, கடைவீதி உள்ளிட்ட இடங்களில், 2,500 பேருக்கு அன்னதானம் வழங்கினர்.* வாழப்பாடி, ஷீரடி சாய் விருக்?ஷா அறக்கட்டளை சார்பில், 26வது மாத சிறப்பு பூஜை, அன்னதானம் வழங்கும் விழா நேற்று நடந்தது. அங்குள்ள செல்வமாரியம்மன் கோவில் வளாகம் முன், அலங்கரிக்கப்பட்ட ஷீரடி சாய் பாபா சிலைக்கு மாலையணிவித்து சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, அறக்கட்டளை நிர்வாகி புகழ் தலைமையில், 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X