பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் தேர்வில் தகுதி பெற்ற 44 பேர் மருத்துவமனையில் காத்திருந்து ஏமாற்றம்

Added : பிப் 14, 2020
Advertisement

வாழப்பாடி: போலீஸ் தேர்வில் தகுதி பெற்ற, 44 பேர், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால், அதற்கான எந்த வசதியும் செய்யப்படாததால், மதியம் வரை காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் எழுத்துத்தேர்வு, 2019 ஆகஸ்டில் நடந்தது. அதில், சேலம் மாவட்டத்தில், வாழப்பாடி, காரிப்பட்டி, ஏத்தாப்பூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் தேர்வு பெற்றவர்களுக்கு, வாழப்பாடி அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதற்காக, 29 ஆண்கள், 15 பெண்கள் நேற்று வந்தனர். அவர்களை வழிநடத்த, அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களிலிருந்து, போலீசாரும் வந்தனர். ஆனால், மருத்துவமனையில் கண் மருத்துவம், சிறப்பு மருத்துவர்கள் உள்ளிட்ட வசதி இல்லாததால், அவர்களுக்கு எந்த பரிசோதனையும் செய்யப்படவில்லை. அதேநேரம், போலீசார், அரசு மருத்துவமனை நிர்வாகம், மாற்று ஏற்பாடும் செய்யவில்லை. இதனால், காலை, 8:30 மணிக்கு வந்தவர்கள், மதியம், 2:00 மணி வரை, மருத்துவமனை வளாகத்திலேயே காத்திருந்து சிரமத்துக்குள்ளாகினர்.

இதுதொடர்பாக, வாழப்பாடி இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் கூறுகையில், ''தேர்வானவர்களுக்கான மருத்துவ பரிசோதனை செய்வதற்கான வசதி செய்யப்படவில்லை என உறுதிசெய்யப்பட்டதால், அதிகாரிகளிடம் பேசினோம். அனைவருக்கும் ஒரே நேரத்தில் பரிசோதனை செய்ய, விரைவில் ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X