பொது செய்தி

தமிழ்நாடு

இன்று இலவசமாக 'சமஷ்டி' உபநயனம்

Added : பிப் 14, 2020
Advertisement

சேலம்: சவுராஷ்டிரா சிறுவர்களுக்கு, இன்று இலவசமாக 'சமஷ்டி' உபநயனம் செய்து வைக்கப்படுகிறது. சேலம், பட்டைக்கோவில், வரத ராஜ பெருமாள் கோவில் தேவஸ்தானம் சார்பில், கோவில் வசந்த மண்டபத்தில், இன்று காலை, இலவசமாக சமஷ்டி உபநயனம் செய்து வைக்கப்படுகிறது. இதற்காக, முன்பதிவு செய்துள்ள, 20க்கும் மேற்பட்ட, சவுராஷ்டிரா பிராமண சமூக சிறுவர்களுக்கு, வேத பண்டிதர்களால், பூணூல் அணிவித்து, 'பிரம்ம உபதேசம், சந்தியா வந்தனம், காயத்ரி மந்திரம் கற்றுத்தரப்படும். மதியம், அறுசுவை விருந்து பரிமாறப்படும். விருப்பமுள்ள சவுராஷ்டிரா பிராமண சமூக பெற்றோர், கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம் என, தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X