பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்கள் தொழுநோய் விழிப்புணர்வு

Added : பிப் 14, 2020
Advertisement

பனமரத்துப்பட்டி: மகாத்மா காந்தியின் நினைவு தினம், உலக தொழு நோய் ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி, பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர், நேற்று, முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலமாகச் சென்று, தொழு நோய் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது, தொழு நோய் குறித்து, மாணவர்கள் எழுதிய பிரதியை, மக்களிடம் வினியோகித்தனர். அத்துடன், தொழுநோய் அறிகுறி, அதற்கு, அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் இலவச சிகிச்சை குறித்து, மாணவ, மாணவியர், வீதி நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைமையாசிரியர் கோடீஸ்வரன், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X