தமிழ்நாடு

சிறப்பு வகுப்புக்கு ரூ.3 லட்சம் ஒதுக்கியும் எஸ்.சி., மாணவர்களுக்கு பயனில்லை

Added : பிப் 14, 2020
Advertisement

சேலம்: மாலை நேர சிறப்பு வகுப்புக்கு, 3.29 லட்சம் ரூபாய் ஒதுக்கியும், பல பள்ளிகளில் பெயரளவில் கணக்கு காட்டி, அத்தொகையை மட்டும் பெறுவதால், எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு பயன்படவில்லை.
தமிழக அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை படிக்கும் எஸ்.சி., - எஸ்.டி., மாணவ, மாணவியருக்கு, பகுதிநேர தொகுப்பூதிய ஆசிரியர்கள் மூலம், கல்வியாண்டின் இறுதி மூன்று மாதத்துக்கு, மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு, சேலம் மாவட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு பகுதி நேர ஆசிரியரின் உழைப்பூதியம், 3.06 லட்சம், சில்லரை செலவினத்துக்கு, 23 ஆயிரம் என, 3.29 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டதற்கான பயனீட்டு சான்று, உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: பல தலைமையாசிரியர்கள், அக்கறை காட்டாமல் செயல்படுகின்றனர். உரிய முறையில் சிறப்பு வகுப்பு நடத்தாததால், மாணவர்களுக்கும் ஆர்வம் இருப்பதில்லை. ஆவணங்களுக்கு மட்டும், ஆசிரியர்களுக்கு உழைப்பூதியம் கொடுத்தது போன்றும், வகுப்புகள் நடப்பது போன்றும் தயார் செய்து விடுகின்றனர். இதனால், இத்திட்ட பலன், எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு போய் சேருவதில்லை. இந்த வகுப்பு நடத்துவது குறித்து, கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X