பொது செய்தி

தமிழ்நாடு

சரக்கு வாகன தகுதிச்சான்றிதழ் புதுப்பிப்பு இரு ஆண்டுக்கு ஒருமுறையாக மாற்றம்

Added : பிப் 14, 2020
Advertisement

சேலம்: சரக்கு வாகன தகுதி சான்றிதழ் புதுப்பிப்பதை, இரு ஆண்டுக்கு ஒருமுறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இயக்கத்துக்கு வரும் புது சரக்கு வாகனங்களுக்கு, இரு ஆண்டுக்கு ஒருமுறை தகுதி சான்றிதழ் பெறுவதும், பழைய வாகனங்களுக்கு ஆண்டுதோறும் தகுதி சான்றிதழ் பெறுவதும் நடைமுறையில் இருந்தது. ஆண்டுக்கொரு முறை தகுதி சான்றிதழ் பெறுவதில், சிரமம் உள்ளதால், இரு ஆண்டாக நீட்டிக்க, அகில இந்திய மோட்டார் காங்., கோரிக்கை விடுத்தது. அதையேற்று, 2019 ஜனவரி முதல், இரு ஆண்டுக்கு ஒருமுறை மேற்கொள்ள, மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டது. தமிழகம் தவிர்த்து, மற்ற மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டது. அந்த உத்தரவை, தமிழகத்தில் அமல்படுத்த, மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் தமிழ்நாடு, மாவட்டம், தாலுகா சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. அதையேற்று, தமிழக போக்குவரத்து துறை முதன்மை செயலர் ஜவஹர், நேற்று உத்தரவிட்டார். இது, பிப்., 17 முதல் அமலுக்கு வரும் என, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து, மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் தமிழ்நாடு பொருளாளர் தனராஜ் கூறுகையில், ''தகுதி சான்றிதழ் புதுப்பிப்பதில், தமிழக அரசு மாற்றம் செய்துள்ளதை வரவேற்கிறோம். அதேநேரம், எரிபொருள் விலையை, ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வருவது, சுங்க கட்டண உயர்வு, இரண்டாம் நபர் காப்பீட்டு தொகை அதிகரிப்பு ஆகியவற்றை, மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X