பொது செய்தி

தமிழ்நாடு

டிரைவரிடம் லஞ்சம்: எஸ்.எஸ்.ஐ., - ஏட்டு 'சஸ்பெண்ட்'

Added : பிப் 14, 2020
Advertisement

சேலம்: வாகன தணிக்கையில் ஈடுபட்ட எஸ்.எஸ்.ஐ., - ஏட்டு லஞ்சம் பெற்றது உறுதியானதால், இருவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
சேலம், கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன், ரோந்து வாகன எஸ்.எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தவர் சுப்ரமணி, 43. இவருடன், டிரைவராக ஏட்டு கணேசன், 32, பணிபுரிந்தார். இவர்கள், கடந்த ஜன., 27ல், பெரியகொல்லப்பட்டியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஆட்டோ டிரைவர் குமார், 32, பதிவு சான்றிதழ் இல்லாமல், சீருடை அணியாமல், மொபைல் போனில் பேசியபடி ஆட்டோ ஓட்டியது தெரியவந்தது. மூன்று பிரிவில் வழக்குப் பதிந்ததால், போலீசார், குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆட்டோவை விடுவிக்க, 900 ரூபாய் போலீஸ் கேட்டதாகவும், அதை லஞ்சமாக வழங்கியதாக, குமார், வீடியோ ஆதாரத்துடன், போலீஸ் உயரதிகாரிகளுக்கு புகாரளித்தார். வீடியோ காட்சிகள், வாட்ஸ்ஆப், பேஸ்புக்கில் உலா வந்தன. இச்சம்பவம் குறித்து, வடக்கு சரக சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனர் அனந்தகுமார், குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில் விசாரித்து, கமிஷனர் செந்தில்குமாரிடம் அறிக்கையளித்தனர். அதில், எஸ்.எஸ்.ஐ., - ஏட்டு லஞ்சம் பெற்றது உறுதியானதால், இருவரையும், 'சஸ்பெண்ட்' செய்து, நேற்று, கமிஷனர் உத்தரவிட்டார்.

2ம் முறையாக...: நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர், புது வீதியை சேர்ந்த அருணாசலம் மகன் சக்திவேல், 30. அதே பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் மகன் பிரபாகரன், 26. நண்பர்களான இவர்களை, அதே பகுதியைச் சேர்ந்த பூபதி, 27, தலைமையில் ஏழு பேர் கும்பல் கடத்தி, சேலம் கொண்டு வந்து, அஸ்தம்பட்டியிலுள்ள குடோனில் அடைத்து வைத்தனர். இக்கும்பலுடன் சேர்ந்து, கடத்தலுக்கு திட்டமிட்ட புகாரில், அப்போது, அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த எஸ்.எஸ்.ஐ., சுப்ரமணியம், 2018 டிச., 28ல் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X