பொது செய்தி

தமிழ்நாடு

'சும்மா' அமர்ந்திருந்த பெண் கவுன்சிலர்கள்; கேள்வி கேட்ட கணவர்கள்: பதிலளித்த அதிகாரிகள்

Added : பிப் 14, 2020
Advertisement

ஏற்காடு: ஒன்றிய குழு முதல் கூட்டத்தில், பெண் கவுன்சிலர்கள் அமைதியாக அமர்ந்திருக்க, அவரது கணவர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு, அதிகாரிகள் பதிலளித்தனர்.
ஏற்காட்டில், ஒன்றிய குழு முதல் கூட்டம், நேற்று நடந்தது. தலைவர் சாந்தாவள்ளி தலைமை வகித்தார். அதில், ஒன்றிய அலுவலகத்தில், தணிக்கைக்கு தனியறை; துணைத்தலைவருக்கு தனியறை; ஒன்றிய அலுவலக வளாகத்தில் மின்வாரிய அலுவலகத்துக்கு தனி கட்டடம்; மாரமங்கலத்தில் பெருமாள், சொரக்காப்பட்டிக்கு மாதையன் ஆகியோரை, அரசு ஒப்பந்த தாரராக பதிவு செய்தல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, கவுன்சிலர்களின் கணவர்கள், ஒன்றிய நிதி கையிருப்பு, நடந்து வரும் பணி, தொடங்கவுள்ள பணி குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு, அதிகாரிகளும் வேறு வழியின்றி பதிலளித்தனர். அதேநேரம், பெண் கவுன்சிலர்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர். இதில், துணைத்தலைவர் சேகர் தவிர்த்து, கவுன்சிலர் கோகிலா, அவரது கணவர் சித்தேஸ்வரன், அதேபோல், வருதாயி ரவி, கலைவாணி முரளி, சாந்தாவள்ளி அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X