பொது செய்தி

தமிழ்நாடு

தேர் செல்லும் சாலை: சீரமைக்க பூமிபூஜை

Added : பிப் 14, 2020
Advertisement

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில், மார்ச்சில், மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் நடக்கும். அப்போது, தேர் செல்லும் வீதியின் குறுக்கே செல்லும் மின் ஒயர்கள் கழற்றிவிடப்படும். அத்துடன், ஏழு மணி நேர மின் தடை செய்யப்படும். இதனால், அந்த வீதியில், தரையில் மின் கேபிள் பதிக்க, மின்வாரியம் நடவடிக்கை எடுத்தது. அப்பணி, அண்மையில் நிறைவடைந்தது. அடுத்த மாதம், மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடக்கவுள்ளது. அதனால், மின் கேபிள் பதிக்கும் போது, சேதமடைந்த தார்ச்சாலையை புதுப்பிக்க, 14வது நிதிக்குழு மானியம் மூலம், 50 லட்சம் ரூபாய், அரசு வழங்கியது. நேற்று, அச்சாலை புதுப்பிக்கும் பணியை, வீரபாண்டி எம்.எல்.ஏ., மனோன்மணி, பூமிபூஜை போட்டு தொடங்கிவைத்தார். ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், பனமரத்துப்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் பாலச்சந்திரன், வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் காளியண்ணன், முன்னாள் தலைவர் பெரியசாமி, அறங்காவலர் குழு தலைவர் குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X