சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணை கொல்ல முயன்ற 4 பேருக்கு 4 ஆண்டு சிறை

Added : பிப் 14, 2020
Advertisement

கலவை: ராணிப்பேட்டை அருகே, பெண்ணை கொல்ல முயன்ற, தந்தை, மற்றும் மூன்று மகன்களுக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து, ராணிப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மழையூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி மல்லிகா; அதே பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி, 72; இவரது மகன்கள் அம்பேத்கர், 41, பார்த்தீபன், 34, தாண்டவராயன், 38; கடந்த, 2009ல் ஏற்பட்ட தகராறில், மாசிலாமணி மற்றும் அவரது மகன்களும், மல்லிகாவை கொலை செய்ய முயற்சி செய்தனர். இது குறித்து மல்லிகா, கலவை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராணிப்பேட்டை சார்பு அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நேற்று வழக்கு விசாரணை முடிந்த நிலையில், மல்லிகாவை கொல்ல முயன்ற மாசிலாமணி, அவரது மகன்கள் அம்பேத்கர், பார்த்திபன், தாண்டவராயன், ஆகிய நான்கு பேருக்கும், தலா நான்கு ஆண்டு சிறை மற்றும் தலா, 1,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X