சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரக்கோணம் - சென்னை மகளிர் சிறப்பு ரயிலில் கோளாறு

Added : பிப் 14, 2020
Advertisement

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக் கோணத்திலிருந்து, சென்னை - வேளச்சேரிக்கு, நாள்தோறும் மகளிர் மற்றும் பொதுபயணிகள் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. மகளிர் ரயில், நேற்று காலை, 7:16 மணிக்கு, அரக்கோணத்தில், பயணிகளை ஏற்றிக்கொண்டு, 7:54, மணியளவில், திருவாலாங்காடு அருகே சென்றபோது, இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது. அப்போது, அதிலிருந்த பயணிகள் பலர், அவ்வழியாக அரக்கோணத்தில் இருந்து - சென்னை நோக்கி சென்ற, மற்றொரு மின்சார ரயிலில், ஏற்றி அனுப்பப்பட்டனர். இதையடுத்து, பழுதடைந்த மகளிர் சிறப்பு ரயில், சரி செய்யப்பட்டு, மீண்டும் புறப்பட்டு சென்றது. ஆனால், 8:20 மணியளவில், கடம்பத்தூர் அருகே சென்றபோது, மீண்டும் பழுதாகி நின்றது. பின்னர், மீண்டும் பழுது சரி செய்யப்பட்டு, 9:10 மணிக்கு திருவள்ளூர் ரயில்வே ஸ்டேஷன் சென்றது. அடுத்தடுத்து ஏற்பட்ட பழுதால், அந்த ரயிலில், கல்லூரிக்கு சென்ற, மாணவ, மாணவியர், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் உள்பட பலர் கடும் அவதிக்கு ஆளாகினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X