சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாயமான கல்லூரி மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம்

Added : பிப் 14, 2020
Share
Advertisement

கண்ணமங்கலம்: மாயமான கல்லூரி மாணவி, காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம், சந்தவாசல் அடுத்த படவேடு ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் வினோதினி, 19; இவர், கேளூரில் தனியார் நர்சிங் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 8 காலை கல்லூரி சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து, ராஜேந்திரன், சந்தவாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வினோதினி, தனது உறவினர் மகன் சசிகுமார், 24, என்பவரை காதலித்து வந்தார். அவர்கள் பழநி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, நேற்று கண்ணமங்கலம் போலீசில் தஞ்சமடைந்தனர். தொடர்ந்து இரு குடும்பத்தினருடன், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்து, வினோதினியை, கணவர் சசிகுமார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். வினோதினி கல்லூரிக்கு, சசிகுமாரின் ஆட்டோவில் தினமும் சென்றுள்ளார். அப்போது, அவர்களிடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த வினோதினியின் பெற்றோர், வேறு ஒருவருடன் திருமணம் செய்ய முயற்சிகள் மேற்கொண்டனர். இதனால், வினோதினி காதலனுடன் திருமணம் செய்து கொண்டார் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X