சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி போட்ட 5 மாத ஆண் குழந்தை சாவு: உறவினர்கள் முற்றுகை போராட்டம்

Added : பிப் 14, 2020
Advertisement

ஆரணி: ஆரணி அருகே, தடுப்பூசி போட்ட ஐந்து மாத குழந்தை உயிரிழந்ததால், உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த விளை கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் சிரஞ்சீவி, 32; இவரது, ஐந்து மாத ஆண் குழந்தை லித்தேசுக்கு, நேற்று முன்தினம் ஆரணி அடுத்த புதுப்பட்டில் நடந்த, மருத்துவ முகாமில் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை, 5:00 மணிக்கு குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனைக்கு, குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால், ஆத்திரமடைந்த குழந்தையின் உறவினர்கள், ஆரணி அடுத்த நெசல் கிராமத்தில் உள்ள, ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஏற்கனவே குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், அதை பரிசோதனை செய்யாமல், தடுப்பூசி போட்ட செவிலியர் செந்தமிழ்செல்வி மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அப்போது, அங்கிருந்த டாக்டர்கள், உயர் அதிகாரிகளிடம் கூறி, நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இது குறித்து, ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X