பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி

Added : பிப் 14, 2020
Advertisement

சுகாதார வளாகம் சீரமைக்கணும்: கடத்தூர் அடுத்த வெங்கடதாரஹள்ளி பஞ்., வெங்கடதாரஹள்ளி புதூரில், 12 ஆண்டுகளுக்கு முன், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கடந்த, 2011 - 12ல், புதுப்பிக்கப்பட்டது. சுகாதார வளாகத்தை முறையாக பராமரிக்காததால், தற்போது சேதமடைந்துள்ளது. இதனால், பெண்கள் மற்றும் குழந்தைகள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலையுள்ளது. எனவே, சுகாதார வளாகத்தை அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
சேதமான மின்மாற்றி மாற்ற வேண்டும்: தர்மபுரி அடுத்த, ஏ.கொல்லஹள்ளியில் அன்னசாகரம் ஏரிக்கரை அருகே, நூலஹள்ளி துணை மின்நிலைய மின்மாற்றி உள்ளது. இதை தாங்கி நிற்கும் கம்பங்களில், சிமென்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், அது எப்போது ஒடிந்து விழுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். அசம்பாவிதம் ஏற்படும் முன், பழுதாகிய மின்மாற்றியின் கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பங்கள் அமைக்க, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குண்டும், குழியுமான சாலையால் அவதி: தர்மபுரி - வெண்ணாம்பட்டி சாலை வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து தர்மபுரி ரயில்வே ஸ்டேஷனுக்கு ரயிலில் வரும் நெல், அரிசி, கோதுமை, உரங்கள், இச்சாலை வழியாக லாரிகளில் இச்சாலை வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. முறையான பராமரிப்பின்றி, இச்சாலை, டீச்சர் காலனி உட்பட, வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் வரை, பலஇடங்களில் சேதமடைந்து, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

காட்சி பொருளான தண்ணீர் தொட்டி: தர்மபுரி அடுத்த, ஏ.ஜெட்டிஹள்ளி பஞ்., காமராஜ் நகரில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன், பஞ்., நிர்வாகம் சார்பில், சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. இதில், சில மாதங்கள் மட்டுமே தண்ணீர் வந்தது. இதன் மின்மோட்டார் பழுதால், இதில் தண்ணீர் வருவதில்லை. இதுகுறித்து, பஞ்., நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X