பொது செய்தி

தமிழ்நாடு

சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்

Added : பிப் 14, 2020
Advertisement

தர்மபுரி: தைப்பூச தேர்த்திருவிழாவையொட்டி, தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் குளத்தில், நேற்று முன்தினம் இரவு, தெப்ப உற்சவம் நடந்தது.
தர்மபுரி, குமாரசாமிப்பேட்டையில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், தைப்பூச தேர்த்திருவிழாவையொட்டி, கடந்த, 4 காலை, 10:30 மணிக்கு கொடியேற்றம், பகல், 1:00 மணிக்கு ஆட்டுகிடா வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. 5 இரவு, 9:00 மணிக்கு புலி வாகனம், 6 இரவு, 8:00 மணிக்கு பூத வாகனம் ஊர்வலம் நடந்தது. 7 காலை, 10:00 மணிக்கு நாகவாகன உற்சவம் நடந்தது. 8 காலை, 10:00 மணிக்கு பால்குடம், பூக்காவடி ஊர்வலம் மற்றும் அலகு குத்துதல் நடந்தது. அன்றிரவு, 9:00 மணிக்கு மேல், சுவாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் பொன்மயில் வாகன உற்சவம் நடந்தது. 9 காலை, 9:00 மணிக்கு விநாயகர் ரத ஊர்வலம் நடந்தது. 10 காலை, 10:00 மணிக்கு, திரளான பெண்கள் பங்கேற்று வடம்பிடித்து தேர் இழுத்தனர். தொடர்ந்து, 11 காலை, 9:00 பிச்சாண்டவர் உற்சவம், வேடர்பறி குதிரை வாகனமும், நேற்று முன்தினம் காலை பூப்பல்லக்கு உற்சவமும், இரவு, 10:00 மணிக்கு மேல், சுவாமி திருவீதி உலா வந்து இக்கோவில் குளத்தில், தெப்பஉற்சவம் நடந்தது. நேற்று காலை சயன உற்சவம் ஆகியவை நடந்தது. விழா ஏற்பாடுகளை, இக்கோவில் விழா கமிட்டியினர் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X