பொது செய்தி

தமிழ்நாடு

அரசின் வீடு கட்டும் திட்டத்தில் அவதிப்படும் பயனாளர்கள்

Added : பிப் 14, 2020
Share
Advertisement

பாலக்கோடு: பாலக்கோடு பகுதியில் மத்திய, மாநில அரசுகளின் வீடுகள் கட்டும் திட்டத்தில், முறையாக பணம் வழங்கப்படுவதில்லை என, பயனாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், மத்திய, மாநில அரசின் குடியிருப்பு திட்டத்தில், பயனாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் கட்டி வருகின்றனர். இந்நிலையில், அரசு ஆணை பெற்றவுடன், பயனாளர்கள் வீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து, தரைதளம் அமைத்துள்ளனர். ஆனால், அரசாணை பெற்ற இவர்களுக்கு, இதுவரை முதல் தவணை தொகையை கூட, பஞ்., நிர்வாகம் சார்பில் வழங்கவில்லை. இதுகுறித்து ஒன்றிய அலுவலர்களிடம் கேட்டபோது, தற்போது பல்வேறு பஞ்.,களில் இருந்த செயலாளர்கள் மாற்றிடம் பெற்று சென்று விட்டனர். எனவே, அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் என, அலட்சியமாக பதிலளிக்கின்றனர். இதனால், பழைய வீட்டை இடித்த மக்கள். தற்போது அரசு நிதி கிடைக்காமல், கடும் அவதிப்படுகின்றனர். மேலும் சிலர், தங்களது உறவினர்களிடம் கடன் வாங்கி, வீடுகட்ட அடித்தளம் அமைத்தவர்கள், கடந்த ஆறுமாதங்களாக வட்டி மட்டுமே கட்டி வருகின்றனர். இதனால், அரசு அறிவித்த வீடு கட்டும் திட்டத்தில், வீட்டை இடித்த பயனாளர்கள், வீட்டை முழுமை படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, பாலக்கோடு பகுதியில், இதுபோன்ற பயனாளர்களின் வீடுகளை ஆய்வு மேற்கொண்டு, அவர்களுக்கு, உரிய காலத்தில் முறையாக அரசு நிதி கிடைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X