பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் விற்ற கடைகளுக்கு அபராதம்

Added : பிப் 14, 2020
Advertisement

கடத்தூர்: கடத்தூரில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம், கடத்தூர் டவுன் பஞ்.,ல், உள்ள காய்கறி, ஓட்டல், இறைச்சி, பலசரக்கு, சாலையோர கடைகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளிட்டவைகளில், செயல் அலுவலர் செந்தில்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட, பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த, ஆறு கடைகளுக்கு, 2,600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆய்வின்போது, டவுன் பஞ்., பணியாளர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X