பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

Added : பிப் 14, 2020
Advertisement

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அடுத்த, லளிகம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு, ஒருநாள் பயிற்சி முகாம் நடந்தது.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த லளிகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாமுக்கு, லளிகம் குறுவள மைய ஒருங்கிணைப்பாள் சீனிவாசன் தலைமை வகித்தார். இதில், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009 பற்றியும், குழந்தைகளின் உரிமைகள், மேலாண்மை குழு அமைக்கும் விதம் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பள்ளியில் ஆற்ற வேண்டிய பணிகள், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய பள்ளி செயல்பாடுகள், கண்காணித்தல் மற்றும் பள்ளி வளர்ச்சி திட்டம் தயாரிப்பது குறித்தும் அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயிற்சியில், 12 பள்ளிகளை சேர்ந்த, 72 பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், பாலக்கோடு வட்டார வளமையத்தின் சார்பில், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பயிற்சி முகாமுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமணன் தலைமை வகித்தார். பாலக்கோடு வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுகுணா பேசினார். ஆசிரியர் பயிற்றுநர் குணசேகரன் பயிற்சியளித்தார். இதில், 13 பள்ளிகளை சேர்ந்த, 78 பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X