தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்கள்; விபத்தை தவிர்க்க மக்கள் கோரிக்கை

Added : பிப் 14, 2020
Advertisement

பாலக்கோடு: பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில் தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்களால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பஸ் ஸ்டாண்டுக்கு, சேலம், தர்மபுரி, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ரூட் பஸ் மற்றும், உள்ளூர் டவுன் பஸ்கள் என நாள்தோறும், 300க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால், இந்த பஸ் ஸ்டாண்டில், பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் எப்போதும் நிறைந்திருக்கும். பஸ்கள் நிறுத்தப்படும் பிட்டில், தள்ளுவண்டி, டூவீலர்கள் போன்றவை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது. பஸ் ஓட்டுனர்களும் அவர்களுக்கான பிட்டில் நிறுத்தாமல், அலட்சியப்போக்குடன் தாறுமாறாக நிறுத்துகின்றனர். இவ்வாறு நிறுத்தப்படும் பஸ்களால், பயணிகள் தாங்கள் செல்லும் பஸ் எங்கு நிற்கிறது என தெரியாமல், தவிக்கின்றனர். மேலும், சில பஸ் ஓட்டுனர்கள் நேரம் தவறாமல் இருக்க, அதிக வேகத்துடன் பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைகின்றனர். இதனால், அடிக்கடி சிறு விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலன்கருதி, இந்த பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்தந்த பிட்டில் பஸ்கள் நிறுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X