குண்டும், குழியுமான சாலை; சீரமைக்க மக்கள் வேண்டுகோள்

Added : பிப் 14, 2020
Advertisement

அரூர்: அரூர் அருகே, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூரில் இருந்து, கொளகம்பட்டி வழியாக, தென்கரைகோட்டைக்கு அரசு பஸ்கள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், கொளகம்பட்டியில் இருந்து, தென்கரைகோட்டைக்கு செல்லும், 4 கி.மீ., சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், இந்த சாலையை பயன்படுத்தும் கொளகம்பட்டி, மங்கானேரி, எருக்கம்பட்டி, வடகரை உள்ளிட்ட கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். மேலும், விவசாய விளை பொருட்களை கொண்டு செல்லும் விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த சாலையில் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே, சேதமடைந்துள்ள இச்சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X