பொது செய்தி

தமிழ்நாடு

தென்பெண்ணை ஆற்று நீரை 2,000 ஏரிகளில் நிரப்ப தீர்மானம்

Added : பிப் 14, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்று நீரை, 2,000 ஏரிகளில் நிரப்ப விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
கிருஷ்ணகிரியில், தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட ஆலோசகர் நசீர் அகமது தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ராமகவுண்டர், மாநில துணைத்தலைவர் தோப்பைய கவுண்டர் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓடும் தென்பெண்ணை ஆற்று நீரை, மாவட்டத்தில் இருக்கும், 2,000 ஏரிகளில் நிரப்ப, மாநில அரசு வாய்க்கால் அமைக்கவில்லை. இதனால் ஏரிகள் வறண்டு, ஆழ்துளை கிணறுகள் வற்றி, பாலைவனமாக மாறி வருகின்றன. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. ஆழியாளம் அணைக்கட்டு திட்டத்தை, 200 அடி உயர்த்தாமல், மிகக் குறைவான உயரம் உள்ள அணைக்கட்டில் இருந்து, வாய்க்கால் அமைக்க முயற்சிப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. வாணிஒட்டு திட்டத்தை, 200 அடி உயரத்துக்கு அணைக்கட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் இருபுறமும் வாய்க்கால் அமைத்து, ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். 60 வயதான விவசாயிகள் அனைவருக்கும் மாதம், 5,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, தமிழக விவசாயிகள் சங்க நிறுவனர் நாராயணசாமியின், 96வது பிறந்த நாளையொட்டி, விவசாயிகள் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X