பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மகளிர் கல்லூரியில் ஒருநாள் கருத்தரங்கு

Added : பிப் 14, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: அரசு மகளிர் கலைக்கல்லூரியில், வேதியியல் மற்றும் பொருளாதார துறைகள் சார்பில், ஒருநாள் கருத்தரங்கு நடந்தது. கிருஷ்ணகிரி, அரசு மகளிர் கலைக்கல்லூரியில், வேதியியல் துறை சார்பில், நேற்று காலை ஒரு நாள் பயிலரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை வகித்தார். ராசிபுரம் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேதியியல் துறை உதவி பேராசிரியர் நித்யா மற்றும் சுதா ஆகியோர் பயிலரங்கம் குறித்து, கருத்துக்களை வழங்கினர். கணிதத்துறை தலைவர் உமா மற்றும் கணினிஅறிவியல் துறைத்தலைவர் லாவண்யா ஆகியோர் பேசினர். இதில் வேதியியல் துறை மாணவியர் நூறு பேர் பங்கேற்றனர். இதேபோல், பொருளாதாரத்துறை சார்பில், பிற்பகல், 12:00 மணிக்கு, 'தொழில் முனைவோர் மூலம் பெண்களின் முன்னேற்றம்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. பொருளாதார துறை கவுரவ விரிவுரையாளர் தமிழ்வாணி வரவேற்றார். தமிழ்த்துறை தலைவர் சிவகாமி கருத்தரங்கின் மைய உரையாற்றினார். கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை வகித்தார். சேலம் சவுடேஸ்வரி கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் பொருளாதார துறைத்தலைவர் தமிழரசி கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். பொருளாதாரத்துறை கவுரவ விரிவுரையாளர் சரசு நன்றி கூறினார். இக்கருத்தரங்கில், அனைத்துத்துறை மாணவியர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X