பொது செய்தி

தமிழ்நாடு

கட்சி கட்டுப்பாட்டை மீறினால் நடவடிக்கை: அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எச்சரிக்கை

Added : பிப் 14, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: நகராட்சி தேர்தலில், கட்சி அறிவிக்கும் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும், அ.தி.மு.க.,வினர் கட்சியில் இருந்து நீக்கப்படுவர் என, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் நடக்கவுள்ள நகராட்சி தேர்தலில், வேட்பாளர்கள் தேர்வு குறித்து, கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள, 33 வட்ட செயலாளர்கள் மற்றும் ஏற்கனவே, நகராட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் ஆகியோருடனான ஆலோசனை கூட்டம், கிருஷ்ணகிரியில் இரண்டு நாட்கள் நடந்தன. அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க.,வினரிடையே ஒற்றுமை இல்லாததால் பல இடங்களில் தோல்வி ஏற்பட்டுள்ளது. இதனால், நகராட்சி தேர்தலில், அ.தி.மு.க.,வினர் ஒற்றுமையாக செயல்பட்டு, கட்சி அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும். கிருஷ்ணகிரி நகராட்சி தேர்தலில், கட்சி அறிவிக்கும் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து, அ.தி.மு.க.,வில் உள்ளவர்கள் போட்டியிட்டால், அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் என, மாவட்ட செயலாளர் எச்சரித்துள்ளார். மேலும், ஒவ்வொரு வார்டிலும், கட்சி சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த, விருப்ப மனு அளித்துள்ளவர்கள், ஒன்று சேர்ந்து பேசி, முடிவு செய்ய வேண்டும் எனவும், மாவட்ட செயலாளர் இக்கூட்டத்தில் அறிவுறுத்தி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X