பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை பார்வையாளர் ஆய்வு

Added : பிப் 14, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகளை, வாக்காளர் பட்டியல் பார்வையாளர், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி அடுத்த தாளப்பள்ளி, கட்டிகானப்பள்ளி, அகச்சிப்பள்ளி ஆகிய பஞ்.,களில், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் குறித்து, மக்கள் அளித்த மனுவின் மீது, மேற்கொண்ட நடவடிக்கைகளை, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மதிவாணன் ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 1,858 ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் பெயர் தேர்தல், நீக்கல் மற்றும் திருத்தம் குறித்து, ஆன்லைன் மூலம், 6,537 மனுக்களும், ஓட்டுச்சாவடி மையங்களில், 48 ஆயிரத்து, 480 மனுக்கள் என, மொத்தம், 55 ஆயிரத்து, 17 மனுக்கள் வந்தன. அவற்றின் மீது அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை குறித்து, தாளப்பள்ளி பஞ்., காமராஜ் நகர், கட்டிகானப்பள்ளி பஞ்., மற்றும் அகச்சிப்பள்ளி பஞ்., கனகமுட்லு கிராமத்தில் ஆய்வு நடந்தது. பொதுமக்களிடம் விசாரணை செய்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கைள் குறித்து தேர்தல் பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார். டி.ஆர்.ஓ., சாந்தி முன்னிலையில் நடந்த இந்த ஆய்வின் போது, ஆர்.டி.ஓ..க்கள் தெய்வநாயகி, குமரேசன், தாசில்தார் ஜெய்சங்கர், தேர்தல் தாசில்தார் ராமசந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X