சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொட்டகையில் தீ: 2 மாடுகள் பலி

Added : பிப் 14, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள, தரணிசந்திரத்தை சேர்ந்தவர் ராஜப்பா, 50. இவர், வீட்டின் அருகில் மாட்டுக்கொட்டகை அமைத்து, ஒரு காளை மாடு, ஒரு பசுமாடு மற்றும் ஒரு கன்றுக்குட்டி ஆகியவற்றை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் திருவிழா என்பதால், வீட்டில் யாரும் இல்லை. இரவில் ஏற்பட்ட மின்கசிவால் மாட்டுக் கொட்டகையில் தீப்பிடித்தது. அருகில் இருந்தவர்கள், தீயை அணைக்க முயன்றனர். ஆனால், கொட்டகை முழுவதும் தீ பரவியது. தகவலின்படி, கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் கொட்டகையில் இருந்த இரண்டு மாடுகள் தீயில் கருகி இறந்தன. கன்றுக்குட்டி மட்டும் காயத்துடன் உயிர் தப்பியது. தீயை அணைக்க முயன்ற சக்திவேல், 20, என்பவரின் கையில் பலத்த தீக்காயம் ஏற்பட்டதால், வேப்பனஹள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தீ விபத்தில் கொட்டகையில் இருந்த புற்கள், கொள்ளு மற்றும் மாடுகள் என, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X